News January 10, 2026

ஊரக பணியாளர்களை அலைக்கழிக்காதீர்: அன்புமணி

image

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து போராடும் ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு அன்புமணி ஆதரவு தெரிவித்துள்ளார். தனது X-ல் அவர், ஆண்டுதோறும் பணியை புதுப்பிக்கும் நடைமுறையை அரசு கைவிட்டு, ஊதியத்தை ₹25,000- ₹60,000 வரை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 29, 2026

JUST IN: சென்னை- கல்லூரி வளாகத்தில் கொடூரம்!

image

சென்னை அரசு கல்லூரி வளாகத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேண்டீன் மாஸ்டர் குணசேகர் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். பெண் சற்று மனவளர்ச்சி குன்றியவர் போல உள்ளதை பயன்படுத்தி கல்லூரி கேண்டீனில் உணவு வாங்கும் போது பாலியல் ரீதியாக சிலர் அத்துமீறி உள்ளனர். இது குறித்து மாணவி கல்லூரி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்த நிலையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2026

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கணவன் – மனைவி!

image

வீட்டில் ஒருவருக்காவது அரசு வேலை கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கு மத்தியில், இந்த தம்பதிக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த ஹேமச்சந்திரா- வினிதா தம்பதி ஹைதராபாத்திலுள்ள IT கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனாலும், அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, குரூப் 2 தேர்வு முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வினிதா சப்-ரிஜிஸ்டாராக, ஹேமச்சந்திரா கலால் வரி ஆய்வாளராக தேர்வாகியுள்ளனர்.

News January 29, 2026

சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹91.79 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!