News March 30, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

Similar News

News April 15, 2025

தேனி: வேலை இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 31.03.2025 அன்றைய தேதிப்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ,அரசால் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு. அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். உடனே ஷேர் செய்யவும்

News April 15, 2025

தேனி பெண்களுக்கு அரிய வாய்ப்பு

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே7 முதல் மே 20 வரை பெண்களுக்கென இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-24 வயது உடையோர் கலந்து கொள்ளலாம் . இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04546- 251478, 9442758363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 15, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 15) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72  க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.95 (126.28) அடி, வரத்து: 5.08 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.50 (52.55) அடி, வரத்து: 8 க.அடி, திறப்பு: இல்லை.

error: Content is protected !!