News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News February 16, 2026
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 676 கோரிக்கை மனுக்கள்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இன்று (பிப்.16) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் பொதுமக்களிடம் 676 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், பயிற்சி ஆட்சியர் அப்துல் ரஷீது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News February 16, 2026
திருவள்ளூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவள்ளூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
திருவள்ளூரில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.


