News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேத நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது,

Similar News

News April 21, 2025

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை : இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கு<> க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 21, 2025

திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

image

திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News April 20, 2025

திருவாரூர்: சீமான் கண்டனம்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!