News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News August 20, 2025
அரியலூர்: கொள்ளிடம் நீர்வரத்து அதிகரிப்பு-ஆட்சியர் எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணையிலிருந்து முறையே வினாடிக்கு 70,000 கன அடி மற்றும் 25,000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
News August 19, 2025
அரியலூர்: வங்கியில் பணி புரிய அரிய வாய்ப்பு

அரியலூர் மக்களே.. வங்கியில் பணி புரிய அரிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 19, 2025
அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற (ஆக.22) அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியராக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.