News December 8, 2024

ஊட்டி முன்னாள் கமிஷனர் சஸ்பெண்ட்

image

நீலகிரி, ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி, அனுமதி வழங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அவரிடம் கணக்கில் வராத பணம் 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை முன்தேதியிட்டு (நவ.29) சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 14, 2025

நீலகிரி: இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

image

நீலகிரி, உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தில் நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க மருத்துவர் ஜெய்னாஃ பத்திலா தங்கள் குழுவினருடன் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கினார். செஞ்சிலுவை சங்க தலைவர் கே. கோபால், செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ், முன்னாள் தலைவர் கே.ஆர்.மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

News August 14, 2025

தையல் பயிற்சி நிலையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நகர வாழ்வாதார மையத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தையல் பயிற்சி நிலையம் உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று தையல் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

News August 14, 2025

நீலகிரி: வங்கி வேலை வேண்டுமா..APPLY NOW!

image

நீலகிரி மக்களே..தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (TMB) Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!