News January 10, 2025
ஊட்டி கேரட் விலை வீழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை தோட்ட காய்கறிகளான, கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்டவை, மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ஒன்று 60 ரூபாயிலிருந்து 4 நாட்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு,35 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.5 முதல் 20 ரூபாய் வரை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
நீலகிரி: ஆயுதப் படையினருக்கான சிறப்பு கலந்தாய்வு

நீலகிரி மாவட்டம் உவமையிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம், காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் பொதுவாக நடைபெறும். இதில் இன்று ஆயுதப் படையினருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டமானது நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை எஸ்பியிடம் தெரிவித்தனர்.
News August 20, 2025
நீலகிரி: ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருது!

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் உள்ள உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ரூ.1,00,000 தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்களுக்கு ரூ.50,000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 31.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தினை அணுகவும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை! நாளை கடைசி

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 21) நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கே <