News October 21, 2025

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

image

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணி கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகள் கல்லூரி மாணவ மாணவி ஆகியோர் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். தேனிலவு தம்பதியினர் உள்ளிட்டோரும் புரிந்தனர். கூட்டம் அதிகரிப்பால் தாவரவியல் பூங்கா முகப்பில் நுழைவு சீட்டு பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது

Similar News

News February 4, 2026

மோட்டார் சைக்கிள் மோதி கட்டுமானத் தொழிலாளி சாவு

image

சிறுமுகை பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான காளிசாமி( வயது 42) என்பவர் நேற்று மாலை 5 மணிக்கு அரவேனு தவிட்டுமேடு பகுதியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆகாஷ்(19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

News February 4, 2026

நீலகிரி: பெரும் அச்சத்தில் பொதுமக்கள்!

image

நீலகிரி: தேவர்சோலை, பாடந்துறை வேர்க்கடவு பகுதியில், பழங்குடியின மக்கள் வளர்க்கும் கால்நடைகளை மர்ம விலங்கு தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்று ஒரு ஆடு கொல்லப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் என்பவரின் ஆடும் பலியானது. வனவிலங்கின் தொடர் அட்டகாசத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 4, 2026

நீலகிரி: பிப்ரவரி மாதத்திற்கான பசுந்தேயிலை விலை அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை விவசாயிகள் தனியார் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதற்கான கொள்முதல் விலையை தேயிலை வாரியம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பு பிப்ரவரி மாதத்திற்கு பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.18.38 ஆக நிர்ணயம் செய்து தேயிலை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!