News December 20, 2025

ஊட்டியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 10,+2, டிகிரி முடித்த, வேலை தேடும் நபர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004 மற்றும் 9489026936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 20, 2025

நீலகிரி மக்களுக்கு ஒரு நற்செய்தி!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக மனித – விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால் மனித விலங்கு மோதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 20, 2025

நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க

News December 20, 2025

நீலகிரி: +2 போதும்.. நல்ல சம்பளத்தில் பள்ளியில் வேலை!

image

நீலகிரி மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!