News January 18, 2026
ஊட்டியில் அதிரவைக்கும் சம்பவம்!

ஊட்டி புதுமந்து பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவர் பொங்கல் பண்டிகைக்காகக் கர்நாடகா சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது கடையின் கதவை உடைத்து கல்லாவிலிருந்த ரூ.7,500 மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு கருவியைத் (DVR) திருடிச் சென்றுள்ளனர். நேற்று கடைக்குத் திரும்பிய ரமேஷ் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
நீலகிரி மக்களுக்கு எச்சரிக்கை!

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் நீர்நிலைகளை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. மாயாற்று பகுதிகளில் முதலைகள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருதி இப்பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News March 10, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (09.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News March 9, 2026
நீலகிரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

நீலகிரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


