News September 2, 2025
ஊட்டியின் முதல் போலீஸனுக்கு இந்த நிலைமையா?

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட மார்க்கெட் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில், 1860ம் ஆண்டு முதல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட தொடங்கியது.ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷனாகும்.கடந்த, 2016ம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய கட்டிடம் காவல் துறையினரின் குழந்தைகளை பராமரிக்கும் மையமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
Similar News
News September 2, 2025
நீலகிரி: எழுத படிக்க தெரியுமா? தமிழக அரசில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 2, 2025
செப்.9ல் ஆட்சி மொழி பயிலரங்கம் துவக்கம்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் 2025 – 2026 ஆண்டின் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வருகிற 9,10ம் தேதிகளில் நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்கள்,வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டு பேர் தவறாமல் பங்கேற்கும் வேண்டுமென தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
நீலகிரி: உங்கள் ஊரிலே வங்கி வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே! உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம் (IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதும். தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இங்கே <