News August 2, 2024
ஊட்டிக்கு வந்தடைந்த 32 பேரிடர் மீட்பு வீரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 32 பேர் நேற்று (01.08.24) மாலை உதகைக்கு வந்தடைந்துள்ளனர் .
Similar News
News September 18, 2025
நீலகிரி: நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை!

கோத்தகிரி: கிளப் சாலை செல்லும் குடியிருப்பு பகுதியில் நேற்று முந்தினம் இரவு சிறுத்தை ஒன்று உலா வந்தது. அப்போது அங்குள்ள வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி வேட்டையாட முயன்றது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் மாடியில் நின்றவாரே சிறுத்தையை துரத்தினார். நாயும் காயங்களுடன் உயிர் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 17, 2025
நீலகிரி: அதிமுக கவுன்சிலர் மகன் தற்கொலை வழக்கில் திருப்பம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக ஊக்க மருந்து எடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர் குருமூர்த்தியின் மகன் ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை, தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 17, 2025
நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.