News November 15, 2024

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: முதல்வர் தொடக்கம்

image

திருமானூர் ஊராட்சி ஒன்றியம் வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் வாயிலாக 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Similar News

News March 1, 2026

அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

image

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் ஓட்ட கோவில் கிராமத்தில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி நேற்று அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ராஜேந்திரன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News March 1, 2026

அரியலூர்: கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள மனகதி கடைவீதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நபர் குறித்தும், வாகனத்தை அதிவேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்திய நபர் குறித்தும் உடையார்பாளையம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!