News January 30, 2026

ஊடகம் மூலம் நாடகமாடும் OPS: செல்லூர் ராஜு

image

அதிமுகவில்<<18992830>> OPS-ஐ இணைக்க சாத்தியமில்லை<<>> என்று EPS கூறியது பழைய செய்தி என தேனியில் செய்தியாளர்களை சந்தித்த OPS சற்றுமுன் கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள செல்லூர் ராஜு, OPS ஊடகம் மூலம் நாடகமாடுவதாக சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் கேட்க வேண்டிய இடம் வேறு ஆனால், OPS அதை செய்யாமல் ஏன் இப்படி அனைவரையும் குழப்பத்திற்கு ஆளாக்குகிறார் என்றார்.

Similar News

News February 6, 2026

மாதம் ₹7,000.. உடனே இதை பண்ணுங்க!

image

கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகையை எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம் வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் இந்த 3 ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு LIC முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம். இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்ளை செய்ய இங்க <>கிளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News February 6, 2026

BREAKING: நாளை Uber, Ola ஸ்டிரைக்!

image

நிலையற்ற ஊதியம் & விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து Uber, Ola, Rapido உள்ளிட்ட தளங்களின் டிரைவர்கள், நாளை (பிப்.7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2025-ம் ஆண்டே மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்திருந்தாலும், தளங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, நாளை பஸ், ரயில் போன்றவற்றை பயன்படுத்திக்கோங்க மக்களே..

News February 6, 2026

விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது தேமுதிக

image

இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே செல்லும் தேமுதிக, இன்று முதல் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதிக்கு ₹10,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுத் தொகுதிக்கு ₹10,000, தனித் தொகுதிக்கு ₹5,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம். இதனால் கோயம்பேடு அலுவலகத்தில் கட்சியினர் நிறைந்துள்ளனர்.

error: Content is protected !!