News August 24, 2024

ஊஞ்சல் சேவையில் ஆண்டாள் ரங்கமன்னர்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆவணி மாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News

News March 3, 2026

விருதுநகர்: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

விருதுநகர் மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 3, 2026

ராஜபாளையத்தில் மீண்டும் போட்டியிட திமுக MLA விருப்பம்

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். உடன் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News March 3, 2026

சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

image

சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது குடி பழக்கத்தால் சில தினங்களுக்கு முன் தகராறு எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவி, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் விருதுநகர் G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!