News February 28, 2026
ஊசி நூலில் உலகை அழகாக்குபவர்கள் தினம்!

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். அரை மனிதனை நேர்த்தியாக நெய்த உடையின் மூலம் முழு மனிதனாக்குபவர்கள் தையல்காரர்கள். சமூகத்தின் அவர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நவீன தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த வில்லியம் ஏலியஸ் ஹோவின் பிறந்தநாளான பிப். 28-ம் தேதி உலக தையல்காரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஃபேஷன் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாரம்பரியத்தையும் பாதுகாப்புக்கும் அவர்களின் பங்களிப்பை போற்றுவோம்!
Similar News
News February 28, 2026
நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்

*இனி <<19259006>>UTS <<>>ஆப் வேலை செய்யாது. அதற்கு பதில் RailOne யூஸ் பண்ணவும் *PF பணத்தை ATM-ல் எடுக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது *WhatsApp Web பயன்படுத்தும் போது 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தானாக லாக்-அவுட் ஆகும் *அரசாங்கத்தின் சிம் பைண்டிங் விதியின் படி, போனில் இருந்து சிம் கார்டை அகற்றினால் WhatsApp போன்ற செயலிகள் வேலை செய்யாது *புதிய வாடகை விதிகளின்படி, 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தால் போதும்.
News February 28, 2026
விஜய் கூட்டணியில் சசிகலா? அடுத்த பிளான் இதுதானா?

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் சசிகலா அடுத்த மாதம் மதுரையில் 19 (அ) 21-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதில் கட்சி பெயரையும், தவெகவுடன் கூட்டணி வைப்பது பற்றியும் அறிவிப்பார் என்கின்றனர். அத்துடன், தென் மாவட்டங்களில் 30 தொகுதிகளில் அதிமுகவுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News February 28, 2026
விஜய் தான் காரணம்.. மாரி செல்வராஜ்

தான் சினிமாவை நோக்கி நகர்வதற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். சினிமா மீதான ஈர்ப்பு அதிகரித்தபோது தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜய் என்றும், தியேட்டரை நோக்கி நகர வைத்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு என்றும் மாரி கூறியுள்ளார். ஆனால், அவரது அரசியல் பயணம் பற்றி, விஜய்யின் அடுத்தடுத்த ஆக்கப்பூர்வமான தொடர்ச்சியான நகர்வுகளுக்கு பின்பே தெரியும் என்றார்.


