News October 21, 2025
உஷார்..கோவையில் வீடு தேடி வரும் அபராதம்!

கோவை மாநகராட்சியில் தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பையை வீசிவிட்டு செல்பவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, அபராதம் விதிக்கப்படும். இதனை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 21, 2025
ரூ.150 கோடிக்கு கோவையில் மது விற்பனை

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கோவை மண்டலத்தில் மட்டும் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
News October 21, 2025
கோவையில் பட்டாசு வெடிப்பு – 36 பேர் மீது வழக்குப்பதிவு!

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தை தாண்டி பட்டாசுகளை வெடித்தாக கோவையில் 36 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
மேட்டுப்பாளையத்தில் ஆண் சடலம் மீட்பு!

மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச் அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்த முதியவர் மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி என்பதும், மயங்கி விழுந்து உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.