News December 20, 2025
உள்ளூர் போட்டியில் விராட் கோலி

சில ODI போட்டிகளில் சொதப்பியபோது விராட் கோலி & ரோஹித், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், விஜய் ஹசாரே டிராஃபியில், டெல்லி சீனியர் ஆடவர் அணியில் கோலி இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர். அவருடன் ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி ஆகியோரும் இடம்பெறுவார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அணியின் கேப்டனாக பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 22, 2025
இந்தியா – நியூசி., இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – நியூசி., இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும். பல துறைகளில் ₹1.79 லட்சம் கோடி அளவிற்கு இந்தியாவில் நியூசி., முதலீடு செய்ய உள்ளது. இதனால் சுயதொழில், விவசாயம், சிறு, குறு நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
TNPSC குரூப்-2, 2A தேர்வு முடிவுகள் வெளியீடு!

TNPSC குரூப்-2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்.28-ம் தேதி 1,270 காலிப் பணியிடங்களுக்காக நடந்த இத்தேர்வினை மொத்தம் 4,18,791 தேர்வர்கள் எழுதினர். நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்டகாலமாக தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை <
News December 22, 2025
குளிர்காலத்தில் அதிகமாக முடி உதிர்வது ஏன்?

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் நாம் தலைமுடி வறட்சி, அரிப்பு, உதிர்வு போன்றவற்றை அதிகமாகவே எதிர்கொள்வோம். ஏனெனில் வெயில் காலத்தில் தாகம் எடுத்து அடிக்கடி தண்ணீர் குடிப்போம். குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறுவதால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதேபோல காற்றில் ஈரப்பதம் குறைவதால் Scalp எளிதில் வறண்டு முடி கொட்டுகிறது. இதைத் தடுக்க 2-3 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடிக்கவும்.


