News December 28, 2025
உள்ளூர் போட்டிகளிலும் கெத்து காட்டிய விராட் கோலி

சர்வதேச போட்டிகளை தொடர்ந்து, உள்ளூர் தொடர்களிலும் விராட் கோலியும் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது விஜய் ஹசாரே கோப்பையில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார். டெல்லி அணிக்காக VHT-ல் விளையாடி வரும் அவர் நடப்பு சீசனில் களம் கண்ட 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 2027 WC-ல் பங்கேற்பதற்காக இப்போது உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.
Similar News
News January 10, 2026
திருவள்ளூர்: தீரா நோய்கள் தீர்க்கும் அற்புத இடம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., நீங்களோ, உங்களது உறவினர், நண்பர்களோ தீரா நோயால் பாதிக்கப்பட்டவரா..? அல்லது உடல் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறீர்களா..? நமது ஊரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் நீராடி, பெருமாளை தரிசித்தால் சர்வ நோய்களும் தீர்வதோடு, புண்ணியங்களும் வந்து சேரும் என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
பிக்பாஸில் இந்த வாரம் எவிக்ஷன் இவரா?

பிக்பாஸ் ஃபைனலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில், டாப் 5-ல் அரோரா, சாண்ட்ரா, திவ்யா, சபரி, விக்ரம் உள்ளனர். ₹18 லட்சம் பணப்பெட்டியுன் கானா வினோத் வீட்டைவிட்டு வெளியேறினாலும், இந்த வாரமும் எவிக்ஷன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. TTF வென்றதால் அரோரா நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டார். தற்போது, விக்ரம் & சாண்ட்ரா குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சரில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் வெளியேறுவார்?
News January 10, 2026
இனி பள்ளிகளில் மாலை சிற்றுண்டி?

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலை நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி வழங்க பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் வாழைப்பழம், சிறுதானியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாம். ஒருவேளை செயல்படுத்தப்பட்டால் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம்?


