News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News July 8, 2025

சென்னை விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் பேர் பயணம்

image

சென்னை விமான நிலையத்தில் மே மாதம் 13449 விமானங்களில் 20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருப்பதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 12958 விமானங்களில் 19 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, டெல்லி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

News July 8, 2025

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அபராதம்

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒரு லட்சம் ரூபாய் ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 8, 2025

சென்னை தான் முதலிடம்

image

படிப்பை முடித்து விட்டு புதிதாக வேலையில் சேருவோருக்கு அதிக சம்பளத்தை அள்ளித்தரும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு சமூக ஊடகமான இன்டீட், தற்போதைய சம்பள போக்கு, ஊழியர்களின் மனநிலை குறித்து ஆய்வு நடத்தியது. இதில், 1,311 நிறுவன உரிமையாளர்கள் உட்பட 3,842 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பது தெரியவந்தது.

error: Content is protected !!