News January 29, 2026

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சைடு கட்டை ஓரமாகப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Similar News

News February 2, 2026

உளுந்தூர்பேட்டையில் பயங்கர விபத்து!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மகன் ராம்குமார் ஆகிய இருவரும் சொந்த வேலையாக உளுந்தூர்பேட்டை செல்வதற்காக வாகனத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத பைக் மோதியது. விபத்தில் கணேசன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நேற்று(பிப்.1) போலீசார் வழக்கு பதிந்தனர்

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கள்ளக்குறிச்சி கிராமத்திற்கு விருது!

image

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, அரசின் திட்டப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்த சிறந்த கிராமமாக ரங்கப்பனூர் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.இதனைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமாராஜ், ரிஷிவந்திடம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக், கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

error: Content is protected !!