News October 16, 2025
உளுந்தூர்பேட்டையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்துலிங்கம் தனது வீட்டில் இருந்து சேலம் ரவுண்டானா நோக்கி நடந்து சென்றுகொண்டு இருந்தார். அதே சாலையில் பின்னால் வந்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது பைக் மோதிய விபத்தில் முத்துலிங்கம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் குணசேகரன் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் இன்று அக்.15 வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News October 16, 2025
கள்ளக்குறிச்சி: கோயிலில் குழந்தை திருமணம்!

வெள்ளிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்னாடு தினேஷ் என்பவருடன் வெள்ளிமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கணவர் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து மகளிர் ஊர் நல அலுவலர் செல்வி அளித்த புகாரில் தினேஷ் & அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐவர் மீது போலீசார் நேற்று (அக்.15) வழக்கு பதிந்தனர்.
News October 16, 2025
கள்ளக்குறிச்சிக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!
News October 15, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக் 15-ம் தேதி ) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க