News January 29, 2026
உலமாக்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ₹2,500 ஆக உயர்வு

உலமாக்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை ₹1,500-லிருந்து ₹2,500 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, 44 உறுப்பினர்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். IUML மாநில மாநாட்டில் பேசிய அவர், தமிழக வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்துள்ள உலமாக்களுக்கான ஓய்வூதியம் ₹5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
Similar News
News February 12, 2026
DMK மீது கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: தமிழிசை

திமுகவின் வெற்றி குறித்து காங்., நம்பிக்கையுடன் இருந்தால், இடையில் விஜய் பக்கம் சாய்ந்தது ஏன் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பாதுகாப்பாக இல்லை; போதைப்பொருள் மாஃபியா தலைவிரித்தாடுகிறது. இதனால், திமுக ஆட்சி மீது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சாடினார். மேலும், திமுக மீது அதன் கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை எனக்கூறிய அவர் 2026-ல் NDA ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இருங்க: ஸ்டாலின்

சமீபகாலமாக திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பை சுட்டிக்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. இந்நிலையில், ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது; அதனால், தோழமை கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வோடு நாம் பணியாற்ற வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இதை செய்தாலே, 2024 போல் 2026 தேர்தலிலும் முழு வெற்றியும் நம் வசமாகிவிடும் எனத் தெரிவித்தார்.
News February 12, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 12, தை 29 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு▶பரிகாரம்: தைலம்.


