News May 28, 2024
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 1000 பேருக்கு உணவு

திருப்பத்தூர் அருகே மாப்பிள்ளை கோவில் தெரு மற்றும் புதிய பேருந்து நிலையம், கோட்டை தெரு பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவீன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
திருப்பத்தூர்: பெண்ணிடம் அத்து மீறியவருக்கு தர்ம அடி!

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே நேற்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூவர், தனியாக இருந்த 30 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்பியோட முயன்றவர்களில் ஒருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்ற இருவரை நாட்டறம்பள்ளி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News March 3, 2026
திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News March 3, 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நல உதவி

திருப்பத்தூர் ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்


