News April 29, 2024

உலக செஸ் போட்டி: அரியலூர் சிறுமி சாம்பியன்

image

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 25.04.2024 முதல் 29.04.2024 வரை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் under 10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிக்கா இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9 வெற்றிகளை பெற்று தங்கம் வென்று உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன.

Similar News

News February 3, 2026

அரியலூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

அரியலூர் மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

News February 3, 2026

அரியலூர்: வாகன ஏலம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 44 இருசக்கர வாகனங்கள் வருகிற பிப்.12ம் தேதி அன்று பொது ஏலம் விடப்படவுள்ளது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் இந்த ஏலமானது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையினை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!