News August 12, 2024
உலக சாதனை விக்கிரவாண்டி மாண்வர்கள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், சஞ்சய் மல்லன் ஸ்போர்ட்ஸ் எனும் சிலம்பம் அகாடமி இயங்கி வருகிறது. இந்த அகாடமியைச் சேர்ந்த 7 மாணவர்கள், நேற்று திருச்சியில் நடைபெற்ற ராயல் புக் ஆஃப் உலக சாதனையில் பங்கேற்றனர். அதில், 2 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
Similar News
News August 27, 2025
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதல் விநாயகர்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்தில் உள்ள விநாயகர் சிற்பம், தமிழ்நாட்டின் முதல் விநாயகர் சிற்பமாகத் திகழ்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இச்சிற்பத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. அறிஞர்களின் ஆய்வில், இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பல்லவர் காலத்திற்கு முந்தைய விநாயகர் வழிபாட்டிற்குச் சான்றாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 27, 2025
திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் 3 பேர் பலி.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். செப். 4 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய், தந்தை, மகன் ஆகியோர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய த.வெ.க. நிர்வாகியான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News August 27, 2025
விழுப்புரம்: உங்கள் நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<