News December 22, 2025
உலக சாதனை படைத்த கிரிக்கெட்டர்கள்

ஒரே டெஸ்டில் நியூசி.,யின் ஓபனர்கள் கான்வே & லாதம் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் இவர்கள் பேட்டை சுழற்றிய விதம் இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் கான்வே 227 ரன்களும், லாதம் 137 ரன்களும் அடித்தனர். 2-வது இன்னிங்ஸில் லாதம் 101 ரன்களும், கான்வே 100 ரன்களும் அடித்தார்.
Similar News
News December 29, 2025
கறிவேப்பிலை ஜூஸின் நன்மைகள்!

உடல்எடையை குறைக்க விரும்பும் நபர்கள், வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஜூஸ் குடிக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க வைக்கும். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். அதோடு ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், ரத்த சோகை பிரச்னையில் இருந்து நாம் விடுபடலாம்.
News December 29, 2025
உலகின் விஸ்வகுருவாக இந்தியா: மோகன் பகவத்

உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார். விஸ்வகுருவாக இந்தியா மாறுவது நம் லட்சியமல்ல, ஆனால் அது உலகத்தின் தேவை என்று அவர் கூறியுள்ளார். இதற்காக இந்துக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என வலியுறுத்திய மோகன் பகவத், இந்து தேசத்தின் எழுச்சி தான் சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி எனக் குறிப்பிட்டார். அதற்கான காலம் தற்போது வந்துவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
News December 29, 2025
தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்: ஜி.ஆர்.சுவாமிநாதன்

தனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்றே தெரியவில்லை என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார். நூல் வெளியீட்டு விழா ஒன்றில், குத்துவிளக்கு ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். ஆனால், தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும் என நம்புவதாக பேசினார். தி.குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டதற்கு எதிராக வழக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


