News August 26, 2024
உலக சாதனை சிலம்பம் போட்டி நிகழ்வு

நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3000 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும், சிலம்பம் பயிற்சி நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று 26ஆம் தேதி காலை 8 முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் இடைவிடாது நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எஸ்.பி ராஜேஸ்கண்ணன், எம்.பி, எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News November 2, 2025
நாமக்கல்லில் நவ.5-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் புதன்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
News November 2, 2025
நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News November 2, 2025
நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நாமக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


