News March 24, 2025
உலக காசநோய் தினம் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி வருடம்தோறும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காசநோய் ஒழிப்பு தீபம் ஏந்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நாகர்கோவிலில் கோணம் அரசு கல்லூரியிலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. முடிவில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா காசநோய் விழிப்புணர்வு தீபத்தினை ஏற்றி தொடர் ஓட்டத்தினை முடித்து வைத்தார்.
Similar News
News April 15, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த உணவுகள்

1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, திருவிதாங்கூரில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இங்குள்ள உணவு வகைகள் கேரள உணவு வகைகளை ஒத்திருக்கும். அதில் சிறந்தவைகள் :
கப்பா
ரச வடை
சத்யா
அவல் (வெட்டன் ரைஸ்)
அவியல்
முந்திரி கொத்து
வாழை சிப்ஸ்
பழ பஜ்ஜி
பலாப்பழ சிப்ஸ்
ஆயினி சக்கை *ஷேர் பண்ணுங்க (உங்களுக்கு தெரிந்த உணவுகளை குறிப்பிடலாம்)
News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

குமரி மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.
News April 15, 2025
தபால் நிலையங்களில் ஒன்றரை லட்சம் சேமிப்பு கணக்கு தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 771 சேமிப்பு கணக்குகள் தபால் நிலையங்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி திட்டம் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களில் 8394 சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.