News April 25, 2024
உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
Similar News
News March 29, 2026
சிவகாசி: யார் இந்த தவெக வேட்பாளர் கீர்த்தனா

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீர்த்தனா விருதுநகரை பூர்வீகமாக கொண்டவர். பிரசாந்த் கிஷோரின் i-pac உள்ளிட்ட முன்னணி அரசியல் ஆலோசனை நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய இவர் விருதுநகரில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கடந்த 3 மாதம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்தவுடன் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
News March 29, 2026
கவனம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர்; புதிய அறிவிப்பு!

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுகவின் கூட்டணி கட்சியான CPI களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.
News March 29, 2026
சிவகாசி தொகுதியில் பிரபல நடிகர் போட்டியா?

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ள சசிகலாவை நடிகர் கார்த்திக் நேரில் சந்தித்து அவரது தலைமையிலான அணிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகர் கார்த்திக் சிவகாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


