News February 1, 2026
உலகில் முதல் பட்ஜெட் எங்கு தாக்கலானது தெரியுமா?

உலகில் முதல்முறையாக நெதர்லாந்தில் 1572-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, இங்கிலாந்து நாட்டில் 1689-ல் தாக்கல் செய்யப்பட்டது. 1640-ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து, வரி விதிப்பை ஒழுங்குபடுத்துவதற்காக 1689-ல் Bill of Rights of 1689 என்ற பெயரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பிரான்ஸ், டென்மார்க், பிரஷ்யா, போர்ச்சுகல், ஸ்வீடன், ஆஸ்திரியா, ஸ்பெயினில் தாக்கலானது.
Similar News
News February 7, 2026
தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது. தீபாராதனையின் போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுணம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டலாம்.
News February 7, 2026
நான் பேசியது புரியலையா? கமல் ரியாக்ஷன்

<<19050083>>நாடாளுமன்றத்தில் கமல்<<>> பேசியது புரியவில்லை என பாஜக வைத்த குற்றச்சாட்டுக்கு, அவர் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு தமிழனாக நல்ல கருத்தை பேசிவிட்டதாக தான் நம்புவதாகவும், அதை மறுப்பவர்கள் விவாதம் நடத்தட்டும் எனவும் கூறினார். மேலும் நல்ல கருத்துகள் விவாதத்திற்குள்ளாக வேண்டும் என்ற அவர், விவாதம் நடத்தினால் உண்மையை புரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
News February 7, 2026
விலக்குவதாக அறிவித்தார்.. TTV கொடுத்த அதிர்ச்சி

தனிக்கட்சி தொடங்கும் முடிவில் உள்ள VK சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜீவிதா நாச்சியாரை அமமுகவிலிருந்து விலக்குவதாக TTV தினகரன் அறிவித்துள்ளார். ஜீவிதா, அமமுக மாணவியர் அணி செயலாளராக தீவிரமாக செயல்பட்டு வந்தவர். வரும் தேர்தலில் இவரை RB உதயகுமாருக்கு எதிராக திருமங்கலம் தொகுதியில் களமிறக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது அதிமுகவுக்கு புதிய நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது.


