News December 5, 2025
உலகிலேயே அதிகம் டிராக் செய்யப்பட்ட புடின் விமானம்

ரஷ்ய அதிபர் புடின் தன் பிரத்யேக விமானமான ‘Flying Kremlin’-ல் இந்தியா வந்துள்ளார். அவர் வந்த இந்த விமானம் தான், இன்று உலகிலேயே அதிகம் டிராக் செய்யப்பட்ட விமானம் என, விமானங்களை டிராக் செய்யும் இணையதளமான Flight Radar 24 தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் புடினின் விமானத்தை Live ஆக இன்று கண்காணித்து வந்ததாகவும் கூறியுள்ளது.
Similar News
News April 7, 2026
₹18,000 சம்பளம்… டிகிரி, டிப்ளமோ போதும்

ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் 450 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஸ்டைபண்டாக மாதம் ₹18,000 வழங்கப்படும். இதற்கு இந்த <
News April 7, 2026
கோமாவில் ஈரான் உச்ச தலைவர்

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவர் பொதுவெளியில் தோன்றவோ, உரையாற்றவோ இல்லை. இந்நிலையில், அயதுல்லா அலி கொல்லப்பட்ட அதே தாக்குதல்களில் காயமடைந்த மொஜ்தபா, சுயநினைவின்றி கோம் நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாட்டை நிர்வகிக்கும் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியவில்லையாம்.
News April 7, 2026
இந்த எண்களை தெரியாமல் இருக்காதீங்க!

அவசர நேரத்தில் இந்த ஹெல்ப்லைன் எண்களை தெரிந்து வைத்திருப்பது உங்களது உயிரையே காக்கலாம். தீயணைப்புத்துறை – 101, பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த புகார்களுக்கு- 181, குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் – 1098, குழந்தைகள் காணாமல் போனால்- 1094, ராகிங் தொல்லைக்கு ஆளானால்- 1800-180-5522, இலவச மருத்துவத்துக்கு – 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இது அனைவருக்கும் உதவும், கண்டிப்பாக SHARE THIS.


