News December 10, 2025
உலகின் மிக நீளமான ஹைவே இதுதான்!

உலகிலேயே மிக நீளமான சாலை, ‘பான்-அமெரிக்கன்’ ஹைவே என்பது உங்களுக்கு தெரியுமா? இது அலாஸ்காவின் ப்ரூடோ பே(Prudhoe Bay)வில் தொடங்கி, எந்த யூ-டர்னும் இல்லாமல், 14 நாடுகள் வழியாக அர்ஜென்டினா வரை செல்கிறது. 30,000 கிமீ நீளமுள்ள இந்த ஹைவே, மழைக்காடுகள், பாலைவனங்களை தாண்டி செல்கிறது. இந்த சாலையில் முழுமையாக பயணம் செய்துமுடிக்க சுமார் 60 நாள்கள் பிடிக்குமாம்.
Similar News
News April 8, 2026
மாட்டிறைச்சியை வீட்டிற்குள் சாப்பிடுங்கள்: அசாம் CM

அசாமில் மாட்டிறைச்சிக்கு தடையில்லை என்று அம்மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டில் முஸ்லிம்கள் மாட்டுக்கறி உண்பதை நான் தடுக்கவில்லை. பொதுவெளியில் உண்பதை தவிருங்கள் என்று மட்டுமே கூறினேன் என்றார். மேலும், கோயில்கள், சத்திரங்களுக்கு 5 கிமீ சுற்றுவட்டாரத்தில் உள்ள உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கும் உண்பதற்கும் தடை உள்ளதை அவர் குறிப்பிட்டார்.
News April 8, 2026
ரேஷன் கார்டுக்கு ₹10,000.. EPS வாக்குறுதி அளித்தார்

இல்லத்தரசிகளுக்கு ₹8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியை பரப்புரை மேடைகளில் தொடர்ந்து ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார். இதற்கு எதிர்வினையாக, ரேஷன் கார்டுக்கு ₹10,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை EPS கையில் எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ₹10,000 வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?
News April 8, 2026
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரான் எண்ணெய்

சீனா சென்று கொண்டிருந்த ‘ஜயா’ என்ற ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் தற்போது இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 2019-ல் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா தற்போது நீக்கியதைத் தொடர்ந்து, சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வர உள்ளது. இதுவரை UAE, குவைத், சவுதி மற்றும் பிற நாடுகளில் இருந்து மட்டுமே ஹார்முஸ் வழியாக நமக்கு எண்ணெய் வந்துகொண்டிருந்தது.


