News November 30, 2025
உலகின் மிகவும் அழகான நாடுகள்

இயற்கை அழகு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு world atlas 2025-ம் ஆண்டுக்கான உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவும் இடம்பிடித்து அசத்தியுள்ளது. டாப் 10-ல் உள்ள நாடுகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News December 1, 2025
காஷ்மீரில் 8 இடங்களில் NIA சோதனை

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் NIA, காஷ்மீரில் 8 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இந்த வழக்கில், ‘White Collor’ (படித்தவர்களே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது) கும்பலின் மூளையாக செயல்பட்ட வாகே உள்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கும்பல் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
News December 1, 2025
கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: OPS

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதை மேலும் 15 நாள்களுக்கு நீடிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். TN-ல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருவதால், பயிர் சாகுபடி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கையில் 100% நியாயம் இருப்பதால் அதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
திரெளபதி -2ல் பாடியதற்கு மன்னிப்பு கேட்ட சின்மயி

இயக்குநர் மோகன்-ஜி-யின் திரௌபதி -2 படத்தில் ‘எம்கோனே’ பாடலை பாடியதற்கு சின்மயி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அப்பாடலை பாடியதற்கு சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார். ஜிப்ரான் அழைத்ததால் பாடலை பாடியதாகவும், அதை சுற்றியுள்ள விஷயங்களை இப்போதுதான் அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்பே தெரிந்திருந்தால் கொள்கை முரண் உள்ள அந்த பாடலை பாடியிருக்க மாட்டேன் எனவும் அவர் விளக்கியுள்ளார்.


