News January 12, 2026
உலகின் மிகப்பெரிய கோயில்கள்

கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றையும் கட்டடக்கலையையும் பறைசாற்றுகின்றன. பெரும்பாலான கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய கோயில்கள் என்னென்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?
Similar News
News January 24, 2026
5 ஆண்டுகளில் CM செய்தது என்ன? அவரே சொல்கிறார்..

தமிழ்நாடு CM ஆக தான் பொறுப்பேற்று 1,724 நாள்கள் ஆவதாக பேரவையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நாள்களில் 8,685 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறிய அவர், 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும் 44,44,721 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் தான் மக்களுக்காக வாழ்ந்ததாகவும், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்ததாகவும் கூறி நெகிழ்ச்சியடைந்தார்.
News January 24, 2026
படுக்கையறையில் சிக்கினாரா ஸ்மிருதியின் Ex காதலர்?

பலாஷ் முச்சால் மீது மோசடிப் புகார் அளித்துள்ள <<18931909>>விக்யான் மானே<<>>, அவர் மீது மேலும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஸ்மிருதி உடனான திருமண கொண்டாட்டங்களின் போது பலாஷ் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் இருந்ததாகவும், அவரை கையும் களவுமாக பிடித்து IND வீராங்கனைகள் அடித்ததாகவும் கூறியுள்ளார். இவை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள பலாஷ், இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
BIG NEWS: ரூ.3,000 ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர சிறப்பு பென்ஷன் ₹2,000-லிருந்து ₹3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிநிறைவு தொகையானது ₹50,000-லிருந்து ₹1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதன் மூலம் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பயனடைவர்.


