News August 27, 2024
உலகளந்த பெருமாள் கோயிலில் நாளை மகா சம்ப்ரோக்ஷணம்

உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நாளை நடைபெறுகிறது. இன்று காலை, ஹோமம், பூர்ணாஹூதி, வேதப்பரந்த சாற்றுமறையும், மாலை ஹோமும், பூர்ணாஹூதி, வேதப்ரபந்த சாற்றுமறை உள்ளிட்டவை நடக்கிறது. மஹா சம்ப்ரோக்ஷண தினமான நாளை காலை 10:30 – 11:30 மணிக்குள் மஹா சம்ப்ரோக்ஷணம் என அழைக்கப்படும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, வேதபிரபந்த சாற்றுமறையும், மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
Similar News
News November 11, 2025
காஞ்சி: மின்கம்பத்தில் மோதி நொறுங்கிய கார்!

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி, நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாலாஜாபாத் சாலை, கீழாண்டை ராஜவீதி பகுதியில் நிலை தடுமாறி, சாலையோர மின்கம்பம் மீது மோதியது. இதில், மின்கம்பம் முறிந்து விழுந்து, காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் மேல்பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்த மூன்று பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 11, 2025
காஞ்சி: குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நாளை (நவ.12) முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
காஞ்சிபுரத்தில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

காஞ்சிபுரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள துணைமின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, வெள்ளை கேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்தூர் வையாவூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


