News November 17, 2024
உலகரங்கில் சாதித்த ஆட்டோ ஓட்டுநர் மகள்
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா(17), அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில், 3 பிரிவுகளில், 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர், தனது கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். காசிமாவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 19, 2024
சென்னை ZOHO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னையில் செயல்பட்டு வரும் ‘ZOHO’ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் இன்ஜினியர் (Network Operations Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் ZOHO-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம்.
News November 19, 2024
4,000+ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வருகின்றன. கேமரா பதிவுகளை, சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
News November 19, 2024
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு
முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வட சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.