News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.
Similar News
News February 4, 2026
உலக புற்றுநோய் தினம் இன்று!

உலக புற்றுநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளான ‘United by Unique’, ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்பும் தனித்துவமானது என்பதை வலியுறுத்துகிறது. நாள்பட்ட இருமல், தலைவலி, உணவு விழுங்க சிரமம், சரும மாற்றங்கள், தொடர்ச்சியான சோர்வு, அடிக்கடி காய்ச்சல், காரணமற்ற எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
News February 4, 2026
விஜய் இப்படி சொல்லலாமா? TTV தினகரன்

‘அதிமுகவை ஊழல் கட்சி’ என்று விஜய் கூறுவது தவறு என TTV தினகரன் கூறியுள்ளார். தனது ரோல் மாடலாக MGR, ஜெ.,வை கூறிவிட்டு, செங்கோட்டையனையும் விஜய் சேர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு பேசிய அவர், சுற்றியிருப்பவர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் அவர் கொஞ்சம் வெளியே வந்து பார்க்கவேண்டும் என்றார். மேலும், விஜய் தங்களுக்கு எதிரி அல்ல எனவும் தங்களது ஒரே எதிரி திமுகதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
News February 4, 2026
மோடியை புறக்கணித்தவர் அண்ணாமலை: SV சேகர்

வாக்கு கிடைக்காது என்பதால் மோடியின் போட்டோவை தேர்தலின்போது அண்ணாமலை பயன்படுத்தவில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். பாஜகவில் பிராமணர்கள் பொறுப்பில் இருக்கக்கூடாது என நினைத்தவர் அண்ணாமலை என்றும், தான் பாஜகவைவிட்டு வெளியேற அவர்தான் காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 10 பேர் இறந்தால்தான் நமக்கு மதிப்பு கூடும் என பேசக்கூடியவர் அண்ணாமலை எனவும் அவர் சாடியுள்ளார்.


