News November 5, 2024
உற்சாக வரவேற்புக்கு தயாராகும் திமுகவினர்

விழுப்புரத்துக்கு இன்று மாலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நாளை காலை அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். துணை முதல்வராக பதவி ஏற்று முதன் முறையாக விழுப்புரத்துக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவற்பு அளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.
Similar News
News August 17, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 16, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 16, 2025
நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை விழுப்புரத்தில் 7936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் கொடிய நோயான ரேபிஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் ராபிஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்