News March 20, 2026

உறுதியாக ‘NO’ சொன்ன இபிஎஸ்

image

பாஜக, தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என இருதரப்பினரும் மறுத்தாலும், திரைமறைவில் பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. திமுகவை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டதாம். ஆனால், விஜய்க்கு கொஞ்சம் இடம்கொடுத்தாலும், நீண்டகால அடிப்படையில் அதிமுகவுக்கு பாதகமாகிவிடும் என்பதால் EPS அதை உறுதியாக மறுத்துவிட்டாராம். புதிதாக இன்னொருவரை ஏன் வளர்த்துவிட வேண்டும் ன அவர் நினைக்கிறாராம். உங்க கருத்து?

Similar News

News March 27, 2026

BREAKING: விஜய்க்கு கண்டிஷன் போட்ட அதிகாரிகள்!

image

சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மனுவில் குறிப்பிட்டது போல சரியாக 10 மணிக்கு விஜய் நிகழ்விடத்திற்கு வர வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இதனை தெரிவித்துள்ளனர்.

News March 27, 2026

CPM-க்கு தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

image

திமுக, காங்., வென்ற தொகுதிகளை CPM கேட்பதால், அக்கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் CPM வெற்றிபெற்ற கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக வென்ற பல்லாவரம், காங்கிரஸ் வென்ற விளவங்கோடு தொகுதிகளையும் CPM கேட்பதால், தொகுதியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

இந்திய அணிக்கு அனுமதியில்லை… அதிர்ச்சி!

image

இந்திய கால்பந்தின் சோகக் கதை தொடர்கிறது. Asia cup qualifier ஆட்டத்தில் பங்கேற்க 10 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சி நேரு ஸ்டேடியம் சென்ற இந்திய அணியினரை உள்ளே விடாமல் தடுத்துள்ளது ஸ்டேடிய நிர்வாகம். கேரள கால்பந்து சங்கம் செக்யூரிட்டி டெபாசிட் கட்டாததே காரணமாம். கோடிக்கணக்கில் கிரிக்கெட்டுக்கு வரிச்சலுகை அளிக்கும் அரசு, கால்பந்தை இப்படி அலட்சியப்படுத்துவதா என விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!