News January 24, 2025
உறுதிமொழி ஏற்ற கல்லூரி மாணவிகள்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,15 வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.பிறகு,தேர்தல் இலச்சின் வடிவத்தில் மாணவர்கள் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News November 9, 2025
திருச்சி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகிறார். நாளை காலை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
News November 9, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள், எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் விரைவாக தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


