News April 16, 2025
உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த தாண்டவன் (49) என்பவருக்கும், அவரது உறவினர் சரவணன் (44) என்பவருக்கும் இடையே கடந்த 13ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் குடிபோதையில் இருந்த சரவணன், தாண்டவனை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த தாண்டவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து நேற்று சரவணனை கைது செய்தனர்.
Similar News
News April 16, 2025
சேலம் மாவட்டத்தில் “காவல் உதவி” செயலி குறித்து காவல்துறை விழிப்புணர்வு…!

சேலம் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் அவசரநிலைகளில் உடனடி பாதுகாப்பு மற்றும் உதவியை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “காவல் உதவி” செயலியின் பயன்பாட்டை விளக்கும் நடவடிக்கைகளை இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி வழியாக அவசர உதவிக்கு அழைக்கலாம், புகார் அளிக்கலாம், காவல் நிலைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.
News April 16, 2025
சேலத்தில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, சேலத்தை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45,000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <
News April 16, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

“விலை ஆதரவு திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறலாம்.விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம்” என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.