News February 18, 2025
உரிமை பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வலியுறுத்தல்

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் எம்சியூ 5 உள்ளிட்ட ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன .இந்த வகை பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 475 கிராம் பொட்டலம் ரூ.864 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Similar News
News August 8, 2025
இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

நெல்லை மாவட்டத்தில் இன்றிரவு (ஆகஸ்ட் 8) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.
News August 8, 2025
நெல்லை போலீசார் சாதனை – கமிஷனர் பாராட்டு

தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 23.07.2025 முதல் 26.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த காவலர்கள் பதக்கங்களை வெற்று சாதனை படைத்தனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதி மணி இன்று (ஆகஸ்ட் 8) நேரில் அழைத்து பாராட்டினார். போலீஸ் துணை கமிஷனர்கள் உடன் இருந்தனர்.
News August 8, 2025
நெல்லை இளைஞர்களே அரசு வேலை – ரூ.68,000 வரை சம்பளம்!

நெல்லை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <