News January 21, 2026
உரிமைத் தொகை உயர்வு.. அறிவிக்கிறார் CM ஸ்டாலின்

CM ஸ்டாலின் தலைமையிலான நடப்பு திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாளை முதல் வழக்கமான அலுவல்கள், கேள்வி-பதில்களை தொடர்ந்து CM ஸ்டாலின் முக்கிய <<18911897>>அறிவிப்புகளை<<>> வெளியிடவுள்ளார். அதில், CM ஏற்கெனவே கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பு இடம்பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மிக விரைவில் மகளிருக்கான இனிப்பான செய்தியை எதிர்பார்க்கலாம்.
Similar News
News February 8, 2026
FLASH: சிக்கன் விலை பெரிய அளவில் குறைந்தது

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக சிக்கன் விற்பனை சற்று சரிந்துள்ளதாக இறைச்சி கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிக்கன் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் மொத்த சந்தையில் 1 கிலோ சிக்கன் ₹115 ஆக குறைந்துள்ளது. முட்டை ₹5.25-க்கு விற்பனையாகிறது. சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் ஒரு கிலோ சிக்கன் ₹160 – ₹180 வரை குறைந்துள்ளது. உங்கள் ஊரில் 1 கிலோ சிக்கன் எவ்வளவு?
News February 8, 2026
தயங்காமல் காதலை சொல்லி விடுங்கள்! இன்று Propose day

Valentine வாரத்தில் இன்று Propose day. காதலுக்கு முதல் படி, காதலை வெளிப்படுத்துவதுதான். எப்போ சொல்வது என பரிதவிக்காமல் இன்றே சொல்லி விடுங்கள். மனதில் தேக்கி வைப்பதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இல்லை. மனதில் பல அச்சங்கள் எழலாம். நம்மை நிராகரித்து விடுவாரா? பிரச்னை ஆகிவிடுமா? என எண்ணங்கள் வரலாம். ஆனால், சொல்லாமலே விட்டுவிட்டால் பின்னால் வருத்தப்பட போவது நீங்கள் தான். தைரியமாக சொல்லிவிடுங்கள்.
News February 8, 2026
நாளை முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகிறது

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.9 முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 – 11 மணி, காலை 11.30 – மதியம் 1.30 மணி, மதியம் 2.30 – மாலை 4.30 மணி என 3 பிரிவுகளாக செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALL THE BEST மாணவர்களே, கலக்குங்க!


