News February 26, 2025

உரிகம் மலைப்பாதையில் விபத்து 10 பேர் படுகாயம்

image

உரிகம் மலைப்பாதையில் வேலி அமைக்கும் கற்களை ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. அதன் மீது பயணிகள் ஆட்டோ மோதி அடுத்த விபத்து நடந்தது. இந்த இரு விபத்துகளிலும் வாகனங்களில் பயணித்த 2 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

கிருஷ்ணகிரி: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் இன்று(ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் நாம் முருகருக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் கர்ம வினைகள் நீங்கும், சொந்த வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும், திருமணத் தடைகள் நீங்கும். மேலும் “ஓம் ஸ்ரீம் க்லீம் சரவண பவ நம:” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி விட்டு, வேண்டியவற்றை மன முறுகி முருகனிடம் வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

‘மக்களே உஷாரா இருங்கள்’ – கிருஷ்ணகிரி போலீஸ்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், வங்கியில் இருந்து ஒருபோதும் ஏடிஎம் கார்டு எண், OTP மற்றும் PIN-களை அலைப்பேசி மூலம் கேட்டு வாங்க மாட்டனர். அவ்வாறு அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம். மேலும், இதுகுறித்து 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளனர. எனவே நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரியுங்கள்.

News August 15, 2025

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா விருது வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பணிகளில் சிறந்து விளங்கும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!