News May 25, 2024
உரம், பூச்சி மருந்து கடைகளில் வேளாண் துறையினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண் அலுவலர்கள் பாலகணபதி, நாகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். பல மாதங்களுக்குப் பின் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Similar News
News March 6, 2026
JUST IN ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல்

திமுக சார்பாக போடி தொகுதியில் போட்டியிட, OPS க்கு அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார். அதேபோல் போடி, ஆண்டிபட்டி தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்திரநாத் திமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை திமுக கட்சி அலுவலகத்தில் இன்று தனது விருப்ப மனுவை வழங்கி உள்ளார். தேனி மாவட்டத்தில் ஸ்டாலின், உ.ஸ்டாலின் போட்டியிடவும் விருப்ப மனு.
News March 6, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News March 6, 2026
தேனி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

கம்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவர் நேற்று (மார்.5) வீரபாண்டி அருகே பைபாஸ் சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், இவர் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


