News December 27, 2025
உயில் எழுதவில்லை என்றாலும் சொத்து கிடைக்கும்!

உயில் எழுதாத ஒரு இந்துவின் சொத்துகள், 3 நிலைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. முதல் நிலையில் இறந்தவரின் மகன், மகள், தாய் ஆகியோருக்கு சொத்து பங்கிடப்படும். முதல் நிலை இல்லாமல் இருந்தால், 2-ம் நிலையில் உள்ள சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்களுக்கு அளிக்கப்படும். இவை இரண்டும் இல்லாமல் இருந்தால், 3-ம் நிலையான தந்தையின் உறவினர்கள் (அ) தாயின் உறவினர்களுக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 29, 2025
தவெகவில் மற்றொரு அதிமுக தலைவர் இணைந்தார்

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், நேற்று Ex MLA சி.கிருஷ்ணன் அக்கட்சியில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது மற்றொரு அதிமுக Ex MLA மரியமுல் ஆசியா செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பொங்கலுக்கு முன் இன்னும் பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என KAS கூறியுள்ளார்.
News December 29, 2025
BSNL அதிரடி ஆஃபர்.. அதிகரித்த டேட்டா!

வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வரும் BSNL நிறுவனம், முக்கியமான ரீசார்ஜ் பிளானில் டேட்டாவை அதிகரித்துள்ளது. ₹225-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 மாதத்திற்கு தினமும் 2.5GB டேட்டா சேவையை பெறலாம். தற்போது, அது தினமும் 3GB ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே சேவையை பிற நெட்வொர்க்குகளில் பெற ₹400 வரை செலவிட வேண்டும். இந்த ஆஃபர் ஜன.31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!
News December 29, 2025
2025 REWIND: இந்தியாவின் டாப் 5 ODI விக்கெட் ராணிகள்!

இந்திய மகளிர் அணி, WC-யை வென்று வரலாற்று சாதனையை 2025-ல் படைத்தது. மொத்தமாக விளையாடிய 23 போட்டிகளில் 15-ல் வெற்றி பெற, இந்திய அணி வீராங்கனைகளின் அபாரமான பவுலிங்கும் முக்கிய காரணமாகும். 2025 ODI-ல் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை விளாசிய வீராங்கனைகளின் லிஸ்ட்டை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களை யாருடைய பவுலிங் மிகவும் கவர்ந்தது?


