News April 12, 2024

உயிரிழந்த விசாரணை கைதியின் உடல் முழுவதும் காயங்கள்

image

மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் வழிப்பறி வழக்குத் தொடா்பாக மதிச்சியம் போலீஸாரால் கடந்த ஏப். 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஏப். 5-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இந்நிலையில், காா்த்திக் உடலில் காயங்கள் இருப்பது உடல் கூராய்வு அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.

Similar News

News December 21, 2025

மதுரை மாநகரில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

மதுரை மாநகரில் (21.12.2025) இன்றைய இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மதுரை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். உங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் நடந்தால் காவல் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டனர்.

News December 21, 2025

மதுரை: மாடு வளர்பவர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் 2,07,900 மாட்டினங்களுக்கு கால், வாய்க்காணை நோய் வராமல் தடுக்க இலவச தடுப்பூசி முகாம் நடக்க இருக்கிறது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக டிச.29ம் தேதி முதல் 21 நாட்களுக்கு அனைத்து கால்நடை மருத்துவமனைகளில் முகாம் நடக்கிறது. 4 மாத கன்று முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். *ஷேர் பண்ணுங்க

News December 21, 2025

மதுரை: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

image

மதுரை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!