News September 4, 2025
உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் குறித்துத் தகவல் அறிந்ததும், உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் தீயணைப்புத் துறை வீரர்கள் (ம) வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
Similar News
News September 6, 2025
சென்னை: கேட்ட வரங்களை தரும் நிமிஷாம்பாள்

சென்னை பாரிமுனையில் உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதியில் வந்து வழிபட்டால் 5வது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News September 6, 2025
சென்னை: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

சென்னை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News September 6, 2025
BREAKING போரூரில் பயங்கர விபத்து: சிறுமி பலி

சென்னை, போரூரில் மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்தாட்ட பயிற்சிக்கு 2 சிறுமிகளை கல்லூரி மாணவி சாரதா பைக்கில் அழைத்து சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சாரதா, மற்றொரு சிறுமி காயம் அடைந்த நிலையில் 10-வயது சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.