News May 16, 2024

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 15/5/24 அன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.

Similar News

News January 27, 2026

திருவாரூர்: காவல்துறையினர் திடீர் ஆய்வு

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை (ஜன.28) நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வருகின்ற பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் சோழராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

News January 27, 2026

திருவாரூர்: கடலோர எல்லையில் குடியேறும் போராட்டம்

image

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதனை புறக்கணித்து கடலோர ஊராட்சிகளில் வாழும் மக்களை பேரிடர்களிலிருந்து பாதுகாத்திட குடிமனை, இலவச வீடு கேட்டு ஜாம்புவானோடை கடலோர எல்லையில் மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் சுமார் 50 பேர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News January 27, 2026

திருவாரூர்: இன்று மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.27) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமக்கோட்டை, மகாராஜபுரம், வல்லூர், தென்பரை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், ஆவிக்கோட்டை, பாளையக்கோட்டை, கோவிந்தநத்தம், புதுக்குடி, கன்னியாக்குறிச்சி, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!